Monday 20th of May 2024 07:48:34 PM GMT

LANGUAGE - TAMIL
-
விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான மாணவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான மாணவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!


விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான 21 மாணவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று  வியாழக்கிழமை(22) நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில்  இடம் பெற்றபோது ஆறாத் துயரில் வாய்விட்டு அழுது அஞ்சலி செலுத்தினர்.

 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அன்று விமான படையினரின் புக்காரா விமானம்  வீசிய குண்டு தாக்குதலில் நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் 21 மாணவர்கள் பலியாகினர்.

 அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு பாடசாலையில் இடம் பெற்றது.

 முன்னதாக முற்பகல் 11மணியளவில்   ஆலயத்தில் ஆத்மா சாந்தி பிரார்த்தனை இடம்பெற்றது.

 அதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில்   பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக, இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த சுந்தரலிங்கம் என்பவர் பொதுச் சுடரினை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டனர்.

தொடர்ந்து நினைவுத் தூபிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் 21 மாணவர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE